Price: ₹ 70.00
(as of Oct 09,2020 14:47:49 UTC – Details)


ஆயகலைகளில் முதன்மையான கலைகளில் சமையல் கலையும் ஒன்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் சமையலைக் கற்றுக் கொள்வார்கள். நான் சிறுவயதிலிருந்தே மீனாட்சியம்மாள் புத்தகத்தைப் பார்த்தும், தொலைக்காட்சியிலும், அம்மாவிடமும், மாமியாரிடமும் கற்றுக் கொண்டேன். நட்புகளிடமும் தெரிந்து கொண்டது நிறைய. மாத இதழ்களில் வரும் ரெசிபிக்களை கத்தரித்து வைத்துக் கொண்டதும் ஏராளம். இப்படி ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதை செய்து பார்த்தால் தானே சுவைத்து பார்த்து சரி செய்து கொள்ள முடியும். இங்கு தான் நமக்கு சோதனை எலிகளின் முக்கியத்துவம் பற்றி தெரிய வரும்…:) நாம் சமைத்ததை நாமே சாப்பிடுவதை விட சோதனை எலிகளிடம் பரீட்சித்து பார்ப்பவர்கள் தான் புத்திசாலிகள் 🙂 நான் புத்திசாலியா இல்லையா என்பது உங்கள் வசமே விடுகிறேன் 🙂

இந்த புத்தகத்தில் உள்ள குறிப்புகள் யாவுமே நான் பலமுறை சமைத்து என் குடும்பத்தினருக்கு பரிமாறியது தான். வட இந்திய, தென் இந்திய உணவுகள் என்று எல்லாமே எங்கள் அன்றாட மெனுவில் இடம்பெறுபவை தான். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து ருசியுங்கள்.

என் கணவரும், மகளும் தான் என் சமையலின் ரசிகர்கள். இவர்களின் ஊக்குவிப்பால் இந்த புத்தகம் வெளிவருகிறது. இருவருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

நட்புடன்

ஆதி வெங்கட்
[email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *